8th Pay Commission DA Hike: வணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் அரசு வேலையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது அதற்கு காரணம் என்னவென்றால் அரசு வேலையில் பணிபுரியும் போது நமக்கு வேலைவாய்ப்பில் மிகப்பெரிய உத்தரவாதம் கிடைக்கிறது நல்ல சம்பளமும் சமூகத்தில் ஒரு நல்ல மதிப்பு இதன் மூலம் கிடைக்கப் பெறுகிறது.
தற்போது அரசு வேலையில் உள்ளவர்கள் அனைவரையும் எதிர்பார்க்கின்ற ஒரு விஷயம் என்னவென்றால் அது எட்டாவது ஊதியக்குழுவாகும். நாம் இந்த பதிவில் எட்டாவது ஊதியக்குழு பற்றியும் அதன் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றியும் விரிவாக காண்போம்.

ஊதியக்குழு
ஊதியக்குழு என்பது ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மத்திய அரசால் உருவாக்கப்பட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்குவதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்குகிறது.
இது தற்போதைய சூழலில் உள்ள விலைவாசி உயர்வு மற்றும் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு ஊதியத்தின் உயர்வை நிர்ணயிக்க பரிந்துரை செய்கிறது.
எட்டாவது ஊதிய குழு
எட்டாவது ஊதிய குழுவை அமைப்பதன் மூலம் ஒருவருடைய அடிப்படை சம்பளத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழும். தற்போதுள்ள ஏழாவது ஊதியக்குழுவில் 2.57 மடங்கு சம்பள உயர்வு கிடைக்கிறது. எட்டாவது ஊதியக்குழு அமைப்பதன் மூலம் இது மேலும் அதிகரிக்க கூடும். எட்டாவது ஓதிக் குழுவில் சம்பள உயர்வு மூன்று மடங்காக அதிகரிக்க கூடும்.
அகவிலைப்படி உயர்வு
எட்டாவது ஊதியக்குழு கொண்டு வருவதன் மூலம் அரசு பணியில் உள்ளவர்களின் DA விகிதம் அதிகமாகும். வழக்கமாக DA ஆனது ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது. எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரை கொண்டு வரும்போது டி ஏ ஆனது கூடுதலாக அதிகரிக்கப்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் பயன்கள்
எட்டாவது ஊதியக்குழுவை கொண்டு வரும் போது ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆனது அதிகரிக்கப்படும். இதன் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள இது நல்ல பலனை ஏற்படுத்தும்.
8வது ஊதிய குழுவை கொண்டு வருவதன் மூலம் கிடைக்கும் பலன்கள்
குறைந்த வருவாய் பெறும் அரசு ஊழியரின் சம்பளம் அதிகரிக்கப்படும். இதன் மூலம் அந்த ஊழியர் தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். இன்றைய விலை வாசி உயர்வை சமாளிக்க எட்டாவது ஊதிய குழுவின் மூலம் கிடைக்கும் வருமானம் நல்ல பயனை கொடுக்கும். ஓய்வூதியதாரர்களுக்கு மிகச்சிறந்த நன்மைகளை இந்த எட்டாவது ஊதிய குழு பெற்று தரும்.
எட்டாவது ஊதிய குழு எப்போது அமைக்கப்படும்?
எட்டாவது ஊதியக்குழுவானது 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ஊதியக்குழுவும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்படுகிறது. ஏழாவது ஊதிய குழுவானது 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் காரணமாக எட்டாவது ஊதியக்குழுவானது 2026 இல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.