ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! உடனடியாக இதை செஞ்சுடுங்க – இல்லனா கஷ்டம்தான்

Aadhar Card Free Update: வணக்கம் நண்பர்களே! இந்திய மக்களுக்கு முக்கிய ஆவணமாக விளங்குவது ஆதார் அட்டையாகும். இந்த ஆதார் அட்டை பயன்படுத்தி தான் அனைவரும் ரேஷன் அட்டை பெறுவது முதல் தேர்வு எழுதுவது வரை ஆவணமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படிப்பட்ட ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று அரசு ஆனது தெரிவித்துள்ளது. அப்படி புதுப்பிப்பதற்காக இலவசமாக அரசாங்கம் ஆனது காலக்கெடுவை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை அரசு ஆனது கால நிர்ணயம் செய்துள்ளது. நாம் இந்த கட்டுரையில் ஆதார் அட்டையை எப்படி இலவசமாக புதுப்பிக்கலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஆதார் அட்டையை புதுப்பிக்க தேவையான ஆவணங்கள்

நமது நாட்டில் 40 கோடி மக்களுக்கு மேல் இன்னும் ஆதார் அட்டையை புதுப்பிக்காமல் இருக்கின்றனர். அவர்கள் விரைவில் ஆதார் அட்டையை புதுப்பிக்க அரசானது செப்டம்பர் 14 வரை கால நிர்ணயம் செய்துள்ளது.

ஆதார் அட்டையில் புதுப்பிக்க உங்களுடைய ரேஷன் கார்டு பான் கார்டு வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுனர் உரிமம் வங்கி கணக்கு புத்தகம் இவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தை பயன்படுத்தி அருகில் உள்ள ஆதார் சேவை மையம் அல்லது உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆதார் இணையதளத்தில் சென்று எளிமையாக நீங்கள் உங்களுடைய பெயர் முகவரி புகைப்படம் போன்றவற்றை புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆதார் அட்டையை எப்படி புதுப்பிக்க வேண்டும்

ஆதார் அட்டையை புதுப்பிக்க முதலில் ஆதார் வெப்சைட்டுக்கு UIDAI சென்று ஆதார் அப்டேட் என்ற லிங்கை கிளிக் செய்து புதுப்பிக்க வேண்டிய தகவலை செலக்ட் செய்ய வேண்டும். பின்னர் அந்த லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பில் செய்து விட்டு தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்தும் முடிந்த பிறகு உங்களுடைய ஃபார்மை சப்மிட் செய்ய வேண்டும்.

  • ஆதார் தளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI உள்ளே செல்ல வேண்டும்.
  • உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் ஒரு முறை மட்டுமே உள்ளே செல்லும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும்.
  • உங்கள் அடையாளச் சான்றிதழ்கள் மற்றும் முகவரியை உறுதிப்படுத்தி.
  • தேவையான அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை பதிவேற்றவும்.
    உங்கள் ஒப்புதலை சமர்ப்பிக்கவும்.

அப்படி செய்யும் பட்சத்தில் உங்களுக்கு 90 நாட்களுக்குள் உங்களுடைய பெயர் பிறந்த தேதி போன்றவற்றை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த புதுப்பித்தல் பணியை நீங்கள் மை ஆதார் அப்ளிகேஷன் மூலமாகவும் செய்து கொள்ளலாம்.

போட்டோ மற்றும் கைரேகையை எப்படி புதுப்பிக்க வேண்டும்

நீங்கள் உங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள போட்டோ மற்றும் கைரேகையை மாற்ற விரும்பினால் நீங்கள் ஆன்லைன் மூலமாக மாற்ற இயலாது. அப்படி உங்களுடைய புகைப்படம் மற்றும் கைரேகை தகவலையும் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று நீங்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு கட்டணமாக ஆதார் சேவை மையத்தில் உங்களிடம் இருந்து ரூபாய் 50 பெற்றுக் கொள்வார்கள்.

  • ஆதார் இணையதளமான UIDAI இணையதளம் உள்ளே செல்ல வேண்டும்.
    பின்னர், அதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பின்னர் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு நேரில் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஒப்படைக்க வேண்டும்.
  • அங்கே உங்கள் நேரடி புகைப்படம் எடுக்கப்படும்.
  • பின்னர், புதுப்பிப்பு கோரிக்கை எண்ணுக்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.
  • இந்த எண் மூலமாக நீங்கள் உங்கள் ஆதார் அட்டை அப்டேட் நிலவரத்த அறிந்து கொள்ளலாம்.

இந்த எளிமையான முறைகளை பயன்படுத்தி செப்டம்பர் 14க்குள் அனைவரும் உங்கள் ஆதார் கார்டில் உள்ள தவறான தகவல்கள் மற்றும் மாற்றப்பட்டுள்ள முகவரி அனைத்தையும் அப்டேட் செய்து பயன்பெறவும்.

Leave a Comment