Airtel 4 Low Price Recharge Plans: இந்தியாவில் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் சமீபத்தில் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி கட்டணத்தை உயர்த்தியது நாம் அறிந்த தகவல் ஆகும். எனினும் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை மற்ற நிறுவனங்களுக்கு மாறாமல் இருக்க அவ்வப்போது புதிய ஆஃபர்களை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் ஏர்டெல் நிறுவனமானது சிறிது காலத்துக்கு முன்னர் தொலைபேசி கட்டணத்தை உயர்த்தியது. தற்போது தங்களது கஸ்டமர் அனைவரையும் கவரும் வண்ணம் நாலு சிறப்பான மலிவு விலையில் ப்ரீபெய்ட் பிளான்களை கொண்டு வந்துள்ளது. அந்தப் பிளான்களை பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஏர்டெல்லின் ரூபாய் 199 ரீசார்ஜ் பிளான்:
ரூபாய் 199 ரீசார்ஜ் பிளானுக்கு ரீசார்ஜ் செய்யும் போது நீங்கள் வரம் பெற்ற கால் செய்யும் வசதியை 28 நாட்கள் வேலிடியுடன் பெற்று மகிழலாம். நாளொன்றுக்கு நூறு எஸ் எம் எஸ் அனுப்பும் வகையில் இந்த பிளான் உள்ளது. 28 நாட்களுக்கு 2 ஜிபி இன்டர்நெட் பயன்படுத்தும் வசதியையும் இந்த பிளான் ஆனது தருகிறது. இந்த பிளானின் மூலம் நீங்கள் இலவசமாக ஹலோ டியூன் வைத்துக் கொள்ளலாம். இந்த பிளான் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
ஏர்டெல்லின் ரூபாய் 296 ரீசார்ஜ் திட்டம்
இந்தப் ரூபாய் 296 பிளானின் வேலிடிட்டி 30 நாட்களாகும். இந்தக் காலம் முழுவதற்கும் உங்களுக்கு 25 GB இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது. இந்த 30 நாட்களுக்கு நீங்கள் வரம்பற்ற கால்களை செய்து மகிழலாம். ஹலோ டியூன் மற்றும் பெண் மியூசிக் போன்றவற்றை பயன்படுத்தி மகிழலாம்.
ஏர்டெல்லின் ரூபாய் 319 ரீசார்ஜ் திட்டம்
இந்த ரூபாய் 319 பிரிப்பை திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களாகவும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் தினமும் நீங்கள் 2 GB டேட்டா பயன்படுத்தும் வசதி பெறலாம். அதுமட்டுமல்லாமல் 30நாட்களுக்கு கால் செய்யும் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் பயன்படுத்தும் வசதியை பெறலாம்.
ஏர்டெல்லின் ரூபாய் 359 ரீசார்ஜ் பிளான்
இந்தப் ரூபாய் 359 பிளானின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். தினமும் 2.5 GB இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி பெறலாம். 30 நாட்களுக்கு வரம்பற்ற கால் செய்யும் வசதியை பெறலாம். ஒரு நாளுக்கு நூறு எஸ்எம்எஸ் கரை அனுப்பும் வசதியையும் பெறலாம்.
ஏர்டெல் நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்துகின்ற வாடிக்கையாளர்கள் மிக அதிகமாக இருக்கின்றனர். எனவே அவர்கள் மேலே கூறிய 4 திட்டங்களையும் பயன்படுத்தி ஓரளவு மலிவு விலையில் அதிக பயன்களை மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது பெறலாம்.