ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளரா நீங்கள் – உங்களுக்கான இரண்டு சூப்பரான ரீசார்ஜ் பிளான் இதோ!

Airtel Annual Recharge Plan: வணக்கம் நண்பர்களே! இன்றைய காலகட்டத்தில் அனைவரின் கையிலும் பணம் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக மொபைல் போன் இருக்கிறது. அந்த அளவில் நமது வாழ்க்கை முறையில் மொபைல் போன் ஒன்றிய உள்ளது. சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் உபயோகிக்கும் மொபைல் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.

இதன் காரணமாக மொபைல் போனை பயன்படுத்துகின்ற வாடிக்கையாளர்கள் மிகவும் மன வருத்தத்தில் ஆழ்ந்தனர். அவரை சரி செய்வதற்கு மற்றும் வேறு நெட்வொர்க்கிற்கு தங்களது வாடிக்கையாளர்கள் மாறாமல் இருப்பதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல சலுகைகளை தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

இந்தியாவில் முன்னணி நிறுவனங்கள் ஒன்று ஏர்டெல் நிறுவனம் ஆகும். இந்த ஏர்டெல் நிறுவனம் ஆனது ஜியோ நிறுவனத்துடன் போட்டி போட்டுக் கொண்டு தற்போது செயலாற்றுகிறது. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு சிறப்பான திட்டங்களை வெளியிட்டுள்ளது. அந்தத் திட்டத்தைப் பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். இந்த பதிவை முழுமையாக படித்து நீங்கள் இந்த திட்டத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Airtel Annual Recharge
Airtel Annual Recharge

ரூபாய் 3599 ரீசார்ஜ் திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் ஆனது ரூபாய் 3599 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தின் காலவரையறை ஒரு வருடமாகும். இந்த திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யும் நபர்களுக்கு ஓராண்டுக்கு அன்லிமிடெட் கால் செய்யும் வசதி கிடைக்கிறது. தினமும் இரண்டு ஜிபி அளவிலான டேட்டா பேக் ஒரு வருடத்திற்கு கிடைக்கிறது.

அதாவது 730GB இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி ஒரு வருடத்திற்கு இவர்கள் பெற்று மகிழலாம். ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் இந்த திட்டத்தின் மூலம் பெறலாம். இது ஒரு சிறப்பான திட்டம் ஆகும். அதிகப்படியான இன்டர்நெட்டை பயன்படுத்துகின்ற பயனாளர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்தால் அவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

ரூபாய் 3999 ரீசார்ஜ் திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூபாய் 399 ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு வருடத்திற்கு காலவரையற்ற போன் செய்யும் வசதி கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 2.5ஜிபி இன்டர்நெட் பயன்படுத்தும் வசதியும் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் விதம் ஒரு வருடத்திற்கு இவர்கள் பெறலாம்.

அதுமட்டுமில்லாமல் ஒரு வருடத்திற்கு டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் சந்தாவை இவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பெற இயலும். இந்த திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஓ டி டி நன்மைகளுடன் கூடிய டேட்டா மற்றும் அதிவேக இன்டர்நெட் பயன்படுத்தும் வசதியை இவர்கள் ஒரு வருடத்திற்கு தாராளமாக பெறலாம்.

இவ்வாறாக ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு வருடத்திற்கான இரண்டு ரீசார்ஜ் பிளானை நீங்கள் பயன்படுத்தி ஒரு வருடம் முழுவதும் வரம்பற்ற என்டர்டைன்மென்ட்டை பெற்று மகிழலாம். வாடிக்கையாளர்கள் எந்த பிளான்கள் உடனே ரீசார்ஜ் செய்து இதன் பலனை அனுபவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment