BSNL Low Price Recharge Plans: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அவ்வப்போது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியும் மற்றும் ரீசார்ஜ் கட்டணத்தை சலுகைகளுடன் குறைத்தும் கொடுத்து வருகின்றன. ஜியோ ஏர்டெல் வோடபோன் போன்ற நிறுவனங்கள் சில பிளான்களுக்கு கட்டணங்களை உயர்த்தியும் சில பிளான்களுக்கு கட்டணங்களை குறைத்தும் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ள பிளான்களைப் பற்றி விரிவாக இந்த கல்லூரியில் காண்போம்.
ரீசார்ஜ் பிளான்கள் அதிகரிப்பு:
நமது நாட்டில் தொலைத் தொடர்பு நிறுவன ரீசார்ஜ் பிளானின் அதிகரிப்பினால் மக்கள் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதன் காரணமாக பலர், ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க்கிற்கு மாறத் தொடங்கியுள்ளனர். இதன் காரணம் எந்த நெட்வொர்க்கில் குறைந்த அளவு கட்டணம் நினைக்கப்படுகிறதோ அந்த நெட்வொர்க்கிற்கு தற்போது மக்கள் மாறத் தொடங்கியுள்ளனர்.

பிஎஸ்என்எல் நிறுவனம், அதன் ஒரு பகுதியாக தற்போது தமது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பல சூப்பரான ரீசார்ஜ் பிளான்களை வழங்கி வருகிறது. மற்ற சிம்கார்டுகளை பயன்படுத்தும் மக்கள் தற்போது பிஎஸ்என்எல் சிம்மை வாங்கி ரீசார்ஜ் செய்ய ஆரம்பித்து விட்டனர். பிஎஸ்என்எல் சிம் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு எந்தத் தொகையில் ரீசார்ஜ் செய்தால் அதிக பலன்களை பெறலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூபாய் 18 ரீசார்ஜ் திட்டம்:
ரூபாய் 18 ரீசார்ஜ் திட்டம், பிஎஸ்என்எல் கொடுக்கும் மிகவும் குறைவான ரீசார்ஜ் திட்டம் ஆகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் கால அளவு 2 நாட்கள் மட்டுமே ஆகும். இரண்டு நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி வீதம் 2 ஜிபி இன்டர்நெட் வசதியை இது கொடுக்கிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் நீங்கள் அன்லிமிட்டட் கால் செய்யும் வசதியை பெற்றுக் கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூபாய் 87 ரீசார்ஜ் திட்டம்:
ரூபாய் 87 ரீசார்ஜ் திட்டம், இது ஒரு Prepaid திட்டமாகும் இந்த திட்டத்தின் கால அளவு 14 நாட்கள் ஆகும். இதில் ஒரு நாளுக்கு 1 ஜிபி வீதம் 14 நாட்களுக்கு 14 ஜிபி இன்டர்நெட் வழங்கும் வசதி கொடுக்கிறது. இந்த 14 நாட்களுக்கு நீங்கள் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியை பெற்றுக் கொள்ளலாம்.
BSNL வழங்கும் ரூபாய் 99 ரீசார்ஜ் திட்டம்
ரூபாய் 99 ரீசார்ஜ் திட்டம் ஒரு Prepaid திட்டமாகும். இதன் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். அன்லிமிடெட் கால் செய்யும் நபர்களுக்கு இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும்.
BSNL வழங்கும் ரூபாய் 107 ரீசார்ஜ் திட்டம்
ரூபாய் 107 ரீசார்ஜ் திட்டம் ஒரு Prepaid திட்டமாகும். இதன் வேலிடிட்டி 35 நாட்கள் ஆகும். 200Minutes கால் கால்களை செய்து மகிழலாம். குறைவான கட்டண பிளானை தேர்வு செய்யும் நபர்களுக்கு இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும்.
BSNL வழங்கும் ரூபாய் 118 ரீசார்ஜ் திட்டம்
ரூபாய் 118 ரீசார்ஜ் திட்டம் 20 நாட்கள் கால அளவு கொண்டது. இந்த திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்து நீங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் கால்களை செய்து மகிழலாம். இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 0.5 GB இன்டர்நெட் வசதி கிடைக்கிறது.
BSNL வழங்கும் ரூபாய் 147 ரீசார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் கால்களை செய்து மகிழலாம். இந்த திட்டத்தின் கால அளவு 30 நாட்கள் வேலிடிட்டி. 10 ஜிபி இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
BSNL ரூபாய் 184 ரீசார்ஜ் திட்டம்
இது ஒரு அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்யும் வசதி கொண்ட திட்டமாகும் இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஒரு நாளைக்கு ஒரு ஜிபி இன்டர்நெட் வசதி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 100 SMS செய்து கொள்ளும் வசதியும் இந்த ரீசார்ஜ் பிளான் தருகிறது.
இவ்வாறான பிஎஸ்என்எல் மலிவான ரீசார்ஜ் பிளான்களை கொண்ட திட்டங்களை பயன்படுத்தி நீங்கள் உங்கள் அருகில் உள்ள பிஎஸ்என்எல் டீலரிடம் பிஎஸ்என்எல் சிம்மை வாங்கி பயன்படுத்தி பலன்களைப் பெற்று மகிழலாம்.