Indian Navy Job: இந்திய கடற்படை வேலை பெற ஆர்வம் செலுத்தும் தேர்வர்கள் கவனத்திற்கு,இந்திய கடற்படை SSR (எஸ்.எஸ்.ஆர்) மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு திருமணமாகாத ஆண்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பங்கள் ஆன்லைனில் 7 செப்டம்பர் முதல் 17 செப்டம்பர் 2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான joinindiannavy.gov.in-ல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
SSR (எஸ்.எஸ்.ஆர்) மருத்துவ உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செயல்முறை 12-ம் வகுப்பு மதிப்பெண்கள், உடல் தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சியின் போது உதவித்தொகை மற்றும் அதன் பிறகு நிலை-3 சம்பளம் வழங்கப்படும்.

காலி பணியிடங்களின் விவரங்கள்
மூத்த இரண்டாம் நிலை ஆட்சேர்ப்பு அதாவது சீனியர் செகண்டரி ரெக்ருய்ட்மெண்ட் (எஸ்எஸ்ஆர்) மருத்துவ உதவியாளர் பதவிக்கு திருமணமாகாத ஆண்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை இந்திய கடற்படை அறிவித்துள்ளது. இந்தப் பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 7, 2024 அன்று தொடங்கி 17 செப்டம்பர் 2024 வரை விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindiannavy.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
மருத்துவ உதவியாளர் பணிக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலை முக்கிய பாடங்களாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த மூன்று பாடங்களிலும் குறைந்தபட்சம் மொத்தம் 50% மதிப்பெண்களும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் உடற்தகுதி
விண்ணப்பதாரர்கள் 1 நவம்பர் 2003 மற்றும் 30 ஏப்ரல் 2007-க்கு இடையில் பிறந்திருக்க வேண்டும். திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும். கூடுதலாக, விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச உயரம் 152.5 செ.மீ இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறை
SSR மருத்துவ உதவியாளர் பணிக்கான தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் பட்டியலை உள்ளடக்கியது. இரண்டாம் கட்டத்தில் எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு (PFT) ஆகியவை அடங்கும்.
சம்பளம்
SSR மருத்துவ உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப பயிற்சி காலத்தில் ரூ.14,600 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும், அவர்கள் டிஃபென்ஸ் பே மேட்ரிக்ஸின் நிலை-3-ல் சேர்க்கப்படுவார்கள், ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை சம்பளம் பெறுவார்கள், மாதாந்திர ராணுவ சேவை ஊதியம் (எம்.எஸ்.பி) ரூ. 5,200 மற்றும் அகவிலைப்படி (டிஏ) ஆகியவை வழங்கப்படும்.
இறுதி தகுதிப் பட்டியல் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும், பிஎஃப்டி, பிஎஸ்டி மற்றும் மருத்துவத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதித் தேர்வுப் பட்டியலில் இடம்பெறுவார்கள்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
SSR மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்களது விண்ணப்பத்தினை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
- முதலில் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
- அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
- தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும். அனைத்து தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பிக்க முக்கிய இணைப்புகள்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை) மற்றும் மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) பணியின் அறிவிக்கை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 07 செப்டம்பர் 2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17 செப்டம்பர் 2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply