Jio New AI Technology: நாளுக்கு நாள் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதுப்புது கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ தற்போது புதிய சேவையை அறிமுகப்படுத்த உள்ளது அதைப் பற்றி நாம் விரிவாக இந்த கட்டுரையில் காண்போம்.
ஜியோ பிரைன்
மும்பையில் நடந்த 47வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜியோ நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி அவர்கள் ஜியோ நிறுவனமானது விரைவில் ஜியோ பிரைன் என்ற செயற்கை நுண்ணறிவு ஏ ஐ அறிமுகப்படுத்த உள்ளதாக கூறினார். இதுவே இந்திய நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு திட்டமாகும். Google சார்ஜ் gpt மற்றும் ஜெமினி ஏஐ போன்று இது சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜியோ AI கிளவுட்
ஜியோ நிறுவனமானது வரும் தீபாவளி முதல் ஜியோ ஏ ஐ கிளவுட் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஜியோ பயனளர்கள் 100 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெரும்பான்மையான ஸ்டோரேஜ் இந்த ஜியோ கிளவுட் மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜியோ டிவி பிளஸ் 800-க்கும் மேற்பட்ட சேனல்
வாடிக்கையாளர்கள் தற்போது ஜியோ டிவி பிளஸ் ஆப் மூலமாக 800-க்கும் மேற்பட்ட சேனல்களை பார்த்து மகிழலாம். இந்த ஜியோ டிவி ஆப்பை பயன்படுத்தி நீங்கள் ஏழு நாட்கள் வரையிலான முந்தைய நிகழ்ச்சிகளையும் கண்டு மகிழலாம். ஜியோ செட்டாப் பாக்ஸ் மூலமாக நீங்கள் இந்த சேவைகளை எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.
ஜியோ டிவி பிளஸ் ஆப் மூலமாக லைவ் டிவி, ஆன் டிமாண்ட் ஷோக்கள் மற்றும் ஆப்ஸ் ஆகியவற்றை ஒரே தளத்தில் கொண்டு வருகிறது. அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற ஆப்களின் சிறந்த கன்டென்ட் ஹை ரேஞ்சில் பார்க்க முடியும்
ஜியோ நிறுவனத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் ஏ ஐ டெக்னாலஜி மூலம் 30 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் இதன் மூலம் மருத்துவம் மற்றும் அனைத்து சேவைகளும் 24 மணி நேரமும் கிடைக்கும் என்றும் முகேஷ் அம்பானி அவரகள் கூறியுள்ளார்.