TN Kooturavu App: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! தமிழக அரசானது மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வகையான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பெண்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக கலைஞர் மகளிர் உதவி திட்டம் மற்றும் இலவச பேருந்து திட்டம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பெண்கள் பெருமானார் நல்ல பலனை அடைந்து வருகின்றனர்.
பெண் பிள்ளைகள் கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது செயல்பட்டு வருகிறது. மாணவிகள் மட்டுமல்லாமல் மாணவர்களும் உயர்கல்வி பெற தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டு மாதம் ரூபாய் ஆயிரம் அவர்களின் வங்கி கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.
அதுபோல சாமானிய மக்கள் தங்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கு வங்கிகளின் நாடி கடன்களை பெற்று வருகின்றனர். அந்த வகையில் கூட்டுறவு வங்கிகளில் எளிதான முறையில் கடன்களைப் பெற கூட்டுறவு என்ற செயலியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது அதனைப் பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக காண்போம்.

கூட்டுறவு வங்கி
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளின் மூலம் பல்வேறு வகையான கடன்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு விவசாயம் சம்பந்தமான கடன்களையும் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்று வருகின்றனர். கூட்டுறவு வங்கிகளை மூலம் விவசாயிகள் அவர்களுக்கு தேவையான உரங்கள் மற்றும் மருந்துகளையும் வருகின்றனர். இவ்வாறான பல்வேறு வகையான சிறப்பு அம்சங்கள் இந்த கூற்று வங்கிகள் மூலம் மக்களுக்கு சென்றடைகிறது.
கூட்டுறவு செயலி
தமிழக அரசானது இந்த வருடம் கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூபாய் ஒரு லட்சம் கோடி கடன் வழங்க திட்டம் தீட்டி உள்ளது. அதன் காரணமாக மக்கள் நேரடியாக சென்று கடன் பெற விண்ணப்பிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். அதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசன் அது கடன் பெரும் வசதியை டிஜிட்டல் மயமாக்க கூட்டுறவு செயலி என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தக் கூட்டுறவு செயலி கூட்டுறவு வங்கியின் அனைத்து சேவைகளையும் ஒன்றாக இணைத்து தகவல்களை கொடுக்கக்கூடிய ஒரு அப்ளிகேஷன் ஆகும். இதன்மூலம் பயனாளர்கள் கூட்டுறவு வங்கிகளுக்கு நேரடியாக சென்று அதிக நேரத்தை செலவிட வேண்டிய அவசியம் இல்லை இந்த செயலியை பயன்படுத்தி அவர்களுக்கு தேவையான வசதியை பெற்றுக் கொள்ளலாம்.
கூட்டுறவு செயலி மூலம் பெறக்கூடிய கடன்கள்:
கூட்டுறவு செயலியை பயன்படுத்தி நீங்கள் பத்தாயிரம் வரை பயிர் கடனை பெற்றுக் கொள்ளலாம். மூன்று லட்சம் வரை பெறப்படும் பயிர் கடன்களுக்கு எந்த வித வட்டியும் கிடையாது. இந்தக் கடனுக்கான கால அவகாசம் 12 இல் இருந்து 15 மாதங்கள் ஆகும்.
பயனாளர்கள் தனது பயன்பாட்டிற்கு தகுந்தவாறு கடன்களை இந்த செயலியின் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். தங்களுக்கு தேவையான கடனுக்கு விண்ணப்பித்து தேவையான ஆவணங்களை இணைத்து அவர்கள் ஆன்லைன் மூலமாக அப்ளை செய்து இந்த கடனை பெற்றுக் கொள்ளலாம்.
அந்த கடனுக்கான விண்ணப்பத்தினை கூட்டுறவு சங்க அலுவலர்கள் ஆராய்ந்து அவர் கடன் பெற தகுதியானவர் என்றால் அவருக்கு கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் பயிர் கடன் மீன் வளர்ப்பு கடன், தனிநபர் கடன், நகை கடன், கால்நடை பராமரிப்பு கடன் மற்றும் பல்வேறு வகையான கடன்களை பெற இயலும். கூட்டுறவு வங்கிகளின் மூலம் தரப்படும் கடன்களுக்கு வட்டி விகிதம் மிகக் குறைவாக இருக்கும்.
இந்த எல்லா கடன்களையும் பெற நீங்கள் கூட்டுறவு வங்கிகளுக்கு செல்லத் தேவையில்லை உங்கள் மொபைல் போனில் கூட்டுறவு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து அதன் மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையான கடன்களுக்கு மற்றும் கூட்டுறவு வங்கி சம்பந்தமான விவரங்களையும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். மீண்டும் அடுத்ததொரு நல்ல பதிவில் சந்திக்கலாம் நன்றி.