TN Mudhalvar Marundhagam Scheme: தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னாள் படை வீரர்களுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்; இந்த திட்டம் மூலமாக தொடங்கப்படும் தொழில்களுக்கு 30% மூலதனம் மானியமும்,3% வட்டி மானியமும் வழங்கப்படும். ஜனவரி 2026க்குள் 75,000க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மருந்தகம் திட்டம்:
மேலும் அந்த உரையில், 2025 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் முதல் குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் முதல்வர் மருந்தகம் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொங்கல் முதல் செயல்படவுள்ள இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும் என்று அதிரடியான சிறந்த திட்டத்தை தெரிவித்துள்ளார் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட மருந்தாளுநர்களுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்ச ரூபாய் மானியம் அரசால் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு விடுத்துள்ளார்.
அது போக , விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 11 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 11 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படுகிறது என்றும் ,
நீலகிரி,வால்பாறைகளில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் விரிவான ஆய்வு நடத்தப்படும் எனவும் அந்த உரையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் பெருமகிழ்ச்சி:
இந்த அறிவிப்புகள் மட்டுமின்றி இன்னும் சில அறிவிப்புகளையும் கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் கண்ட வளர்ச்சியை பற்றியும் விரிவாக உரையாற்றினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த உரையில் கூறியது போல 2025ஆம் ஆண்டு 1000 மருந்தகங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டால் பல ஏழை எளிய மக்களும் முழுதாக பயனடைவர் , இது போல் ஒரு சிறப்பான திட்டம் வருகின்ற பொங்கல் திருநாளில் நிறைவேறும் என்பதில் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர் தமிழக மக்கள்.