டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு – தேர்வாணையம் வெளியிட்டுள்ள மிக முக்கிய தகவல்! கண்டிப்பா படிங்க

TNPSC Group 2 Exam Guidelines: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி  நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்திருந்த நிலையில் தேர்விற்கான ஹால் டிக்கெட் எப்போது வெளியிடப்படும் என்ற ஏதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்து நிலையில் குரூப் 2 தேர்விற்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் செப்டம்பர் 4 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 2 நிலையில் காலியாக உள்ள இரண்டாயிரத்து 327 பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. பட்டப்படிப்பு கல்வித்தகுதி கொண்ட இப்பணியிடங்களுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 962 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ள முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனை, தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2 Exam Guidelines
TNPSC Group 2 Exam Guidelines

தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு, தேர்வறையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-

  • தேர்வர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில், காலை 9 மணிக்குள் தேர்வறைக்குள் இருக்க வேண்டும்.
  • 9 மணிக்கு பிறகு எந்த ஒரு தேர்வரும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார். தேர்வு நேரம் முடியும் வரை தேர்வர் யாரும் தேர்வு அறையைவிட்டு வெளியறே அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  • டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுடன் தேர்வர்கள் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.
  • ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை(Pan Card) , வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் Xerox Copy தேர்வர்கள் கொண்டு வர வேண்டும்.
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட்டில் தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை என்றால் கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றை வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர் முகவரி, பதிவு எண்ணை குறிப்பிட்டு, கையொப்பமிட்டு, ஹால் டிக்கெட்டின் ஒளி நகல் உள்ளிட்ட ஏதோனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை இணைத்து, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சரிபார்க்கப்பட்டு மேலொப்பமிடும் பொருட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
  • குரூப் 2 ஹால் டிக்கெட்டில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உடனடியாக தேர்வாணையத்திற்க மின்னஞ்சல் (grievance.tnpsc@tn.gov.in) மூலம் தெரிவிக்கலாம்.
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை (Black ink Ball Point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு அலைபேசி, புத்தகங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வர்கள் கொண்டு வர வேண்டாம். மீறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் அல்லது வேறு ஏதேனும் அபராதத்திற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2 Hall Ticket Download Link: Download

Leave a Comment