TNPSC Group 2 Last Minute Tips: டிஎன்பிஎஸ்சி பல்வேறு வகையான அரசு தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பல்வேறு அரசு பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வானது செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுத பல பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வில் வெற்றி பெற கடைசி நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு:
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இரண்டு நிலைகளில் நடைபெற உள்ளது. அது என்னவென்றால் தகுதித் தேர்வு மற்றும் மெயின் தேர்வு. முதலாவதாக தகுதித் தேர்வில் எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் எக்ஸாம்க்கு அனுமதிக்கப்படுவர்.
தகுதி தேர்வு 300 மதிப்பெண்களுக்கு அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடைபெறும். இதில் 200 வினாக்கள் கேட்கப்படும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 100 மதிப்பெண்ணுக்கும் கணிதத்தில் 25 மதிப்பெண்களுக்கும் பொது அறிவு பகுதிகளில் 75 மதிப்பெண்களுக்கும் வினாக்கள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெறும் தேர்வர்கள் மெயின் எக்ஸாம் இருக்கு அனுமதிக்கப்படுவர்.
மெயின் எக்ஸாம் ஆனது இரண்டு முறைகளில் நடைபெறும். குரூப் 2 தேர்விற்கு மெயின் எக்ஸாம் எழுத்து தேர்வு வடிவிலும் குரூப் 2a தேர்வுக்கு மெயின் எக்ஸாம் ஆனது அப்ஜெக்ட்டி வடிவிலும் நடைபெறும். இதுவும் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். தமிழ் தகுதி தேர்வும் நடைபெறும். தமிழ் தகுதி தேர்வு மதிப்பெண் ஆனது செலக்சன் ப்ராசஸ்க்கு எடுத்துக் கொள்ளப்படாது.
டிஎன்பிசி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற கடைசி நேர டிப்ஸ்:
முதலாவதாக மொழி பாடத்திற்கு அதாவது தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும் ஏனென்றால் இந்த பாடப்பகுதியில் நமக்கு 100 வினாக்கள் கேட்கப்படுகிறது இந்தப் பாடப் பகுதி தான் நமது வெற்றியை தீர்மானிக்க பெரிதும் உதவுகிறது எனவே இனிவரும் காலங்களில் மொழி பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ரிவிஷன் செய்ய தொடங்குங்கள் பழைய வினாத்தாள்களை நன்கு பயிற்சி மேற்கொள்ளுங்கள் இதன் மூலம் நீங்கள் தேர்வு அறையில் வேகமாக இந்த நாட்களுக்கு பதில் அளிக்க இயலும்.
அடுத்ததாக நீங்கள் படிக்க வேண்டிய பாடப்பகுதி கணிதம் இதில் 25 மதிப்பெண்கள் உங்களுக்கு கேட்கப்படும் பழைய கேள்வித்தாளில் கேட்கப்பட்ட வினாக்களை நன்றாக சால்வ் செய்து பழகுங்கள். டாபிக்வைஸ் கணித கேள்விகளை நன்கு போட்டு பழகுங்கள்.
குரூப் 2 தேர்வு ஆனது டிகிரி ஸ்டாண்டர்ட் என்பதால் நடப்பு நிகழ்வுகளை சார்ந்த அதிக கேள்விகள் கேட்க அதிக வாய்ப்பு உள்ளது எனவே நீங்கள் நடப்பு நிகழ்வுகளை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பு நிகழ்வுகளை ஒரு முறை அலசி பாருங்கள் அதில் உள்ள முக்கிய தகவல்களை Hint எடுத்து வைத்துக்கொண்டு படியுங்கள்.
யூனிட் 8 யூனிட் 9 எந்த பாடப்பகுதியில் அதிக கேள்விகள் கேட்கப்படும் இதையும் நன்கு ரிவிஷன் செய்து கொள்ளுங்கள். இந்திய அரசியலமைப்பு வரலாறு புவியியல் பாடங்களை தினமும் பயிற்சி செய்யுங்கள். சயின்ஸ் பாடத்தை பொறுத்த வரை பிரிவியஸ் இயர் கொஸ்டின் படித்து வைத்துக் கொள்ளுங்கள் அதுவே போதுமானது. அதிலும் பயாலஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் இனிவரும் காலங்களில் படித்தால் நீங்கள் நிச்சயம் 165 மதிப்பெண்களுக்கு மேல் பெற அதிக வாய்ப்பு உள்ளது அப்படி நீங்கள் பெரும் பட்சத்தில் நீங்கள் குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வு எழுத நீங்கள் நிச்சயம் தகுதி பெறுவீர்கள். எனவே கவனமாக படித்து இந்த தேர்வில் நன்கு வெற்றியடைய வாழ்த்துக்கள்.