வாட்ஸ் ஆப் மூலமாக சமையல் கேஸ் சிலிண்டரை புக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்

Whatsapp Gas Booking: இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய அப்ளிகேஷன்களில் மிக முக்கியமானது Whatsapp ஆகும். பெரும்பான்மையோர் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்ள Whatsapp பயன்படுத்துகின்றனர். Whatsapp மூலம் பணத்தை பரிமாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

தற்போது நிறுவனங்கள் வாட்ஸ் அப் மூலமாக பல்வேறு வகையான வசதிகளை செய்து கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் WhatsApp மூலமாக கேஸ் சிலிண்டர்களை எவ்வாறு முன்பதிவு செய்யலாம் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக காண்போம்.

Whatsapp Gas Booking
Whatsapp Gas Booking

கேஸ் சிலிண்டர்

நம் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமையல் செய்வதற்கு கேஸ் சிலிண்டர் பயன்படுத்துகின்றனர். இந்த கேஸ் சிலிண்டர் தீர்ந்த பிறகு புதிதாக கேஸ் சிறந்தவை பெற நாம் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு முன்னர் போன் கால் செய்தோ அல்லது நேரடியாக கேஸ் அலுவலகத்துக்கு சென்றோம் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வீட்டில் இருந்தபடியே நீங்கள் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம். Whatsapp மூலம் தற்போது கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து கொள்ளவும் வசதி எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன.

Whatsapp மூலம் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்வது எப்படி?

நமது நாட்டில் உள்ள மக்களுக்கு கேஸ் சிலிண்டர் எண்ணெய் நிறுவனங்கள் வழங்குகிறது. கேஸ் சிலிண்டர் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்கள் முன்பதிவு செய்து கொண்டு பெறுகின்றனர். தற்போது முன்பதிவு செய்யும் வசதி வாட்ஸ் அப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

Indane கேஸ் சிலிண்டரை பெற உங்களுடைய கேஸ் சிலிண்டரை பெற பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 7588888824 என்று எண்ணிற்கு REFILL என்று மெசேஜ் அனுப்பினால் போதும் உங்களது கேஸ் சிலிண்டர் முன்பதிவு ஆகி அதற்கான விவரங்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும்.

HP கேஸ் சிலிண்டர் பெற உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 9222201122 என்ற எண்ணிற்கு BOOK என்று மெசேஜ் செய்தால் உங்களுடைய கேஸ் சிலிண்டர் பதிவு செய்யப்பட்டு உங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்யப்பட்ட தாருங்கள் பகிரப்படும்.

பாரத் கேஸ் புக் செய்வதற்கு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 1800224344 என்ற எண்ணிற்கு BOOK என்று மெசேஜ் அனுப்பினால் உங்களுடைய கேஸ் சிலிண்டர் ஆனது பதிவு செய்யப்படும். அதற்கான தகவல் உங்களுடைய whatsapp எண்ணிற்கு அனுப்பப்படும்.

நான் மேலே கூறிய வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்களுடைய வாட்ஸ் ஆப் பயன்படுத்தி சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டரை பதிவு செய்து பயன்பெறலாம். மீண்டும் நல்லதொரு பயனுள்ள தகவலில் சந்திக்கலாம் நன்றி.

Leave a Comment